நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை வியாபாரிகளைச் சந்தித்து பேசினார் நபிகள் நாயகம். அப்போது அவர் கீழ்க்கண்டதை கூறினார்.
வணிகம் செய்யும் நீங்கள், சரக்குகளை விற்பதற்காக வீண் பேச்சு, பொய் சத்தியம் செய்வதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே வியாபாரத்தில் நேர்மையையும், தர்மத்தையும் கலந்து விடுங்கள். கொள்முதல் செய்வதிலும், விற்பதிலும், கடனை பெறுவதிலும் மென்மையை பின்பற்றுங்கள். கடுமையாக உழைப்பதும் பொய் பேசாமலும் நடத்தும் வியாபாரத்தில் கிடைக்கும் லாபமே சிறந்த சம்பாத்தியம். இப்படி நாணயத்துடன் வாழ்ந்தவர்கள் மறுமை நாளில், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் செய்த நல்லவர்களுடன் இருக்கும் பேறு பெறுவர்.