தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும்


ADDED : அக் 20, 2023 05:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2023 05:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி நாயகம் கூறுவதைக் கேளுங்கள்.

கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்குபவனே வலிமை வாய்ந்தவன். கோபம் கொள்பவனை இறைவன் விரும்ப மாட்டான். கோபம் ஷைத்தானின் வெளிப்பாடாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கிறான். நீரால் மட்டுமே நெருப்பை அணைக்க முடியும். எனவே கோபம் வந்தால் 'ஒளு' (தண்ணீரால் சுத்தம் செய்தல்) செய்து கொள்ள வேண்டும்.

கோபக்காரரான ஒருவர் நபிகள் நாயகத்திடம், ''எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்'' என கேட்டார். அதற்கு அவர், ''கோபம் கொள்ளாதீர். அதுவே உம்மை பலவித தீங்குகளில் இருந்து காப்பாற்றும்'' என பதிலளித்தார்.

அந்த மனிதர் மீண்டும் ''கோபத்தை எப்படி குறைப்பது எனக்கேட்டார்.

''ஒருவர் நிற்கும் பொழுது கோபம் வந்தால், அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். அப்படியும் குறையாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us