ஒருநபி மொழியில் பின்வருமாறு காணப்படுகிறது. இறைவனின் அர்ஷை எல்லா வானவர்களும் காலையிலும் மாலையிலும் வந்து தரிசித்து ஸலாம் கூறுகின்றனர். இவர்கள் 70 ஆயிரம் அணிகளாக வந்து அர்ஷை வலம் வருகிறார்கள். அவர்கள் 'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று 'தஸ்பீஹ்' ஓதிய வண்ணம் இருக்கின்றனர். இந்த அர்ஷின் அடியில் ஒரு சேவல் இருக்கிறது. இந்தச் சேவல் தன் இறக்கைகளை விரித்தால் அது கிழக்கையும் மேற்கையும் தொடும் அளவில் உள்ளது. அது விடியற் காலையின் பொழுது தன் சிறகை அடித்து, 'ஸுப்ஹான மலிக்குல் குத்துாஸ்' என்று கூறுகிறது. இதனுடைய சப்தத்தைக் கேட்ட பிறகு தான் பூமியிலுள்ள சேவல்களெல்லாம் கூவத் தொடங்குகின்றன. வெள்ளைச் சேவல்கள் விடியற்காலையில் கூவும்பொழுது நீங்கள் கோபப்பட்டு அதனைத் திட்டாதீர்கள். அவை மக்களைத் தொழுகைக்காக எழுப்புகின்றன. சேவலின் கூவலைக் கேட்ட பிறகுதான் பறவையினங்கள் தங்கள் பாஷையில் இறைவனை துதி செய்கின்றன.