ADDED : அக் 27, 2023 11:25 AM

நபிகள் நாயகத்தைப் பார்க்க வந்த தோழர், தனது மற்றொரு தோழரை குறித்து புகழ்ச்சியாக கூறினார். அதாவது அவர் செய்துள்ள நல்ல செயல்களுக்காக நிச்சயம் சுவனத்திற்குதான் செல்வார் என மீண்டும் புகழ்ந்தார். உடனே நாயகம் அவரது பேச்சை தடுத்து, ''நீர் உம் சகோதரரின் கழுத்தை அறுத்து விட்டீர்'' என மூன்று முறை அழுத்தமாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ந்தார்.
''உங்களில் யாராவது மற்றவரைப் புகழ்ந்தால், அப்படி புகழ்வது அவசியமென்றால் புகழட்டும். நான் இன்னார் இப்படிப்பட்டவர் என்று கருதுகின்றேன். இறைவனே அறிந்தவன்'' என சொல்ல வேண்டும்.
இந்த வசனம் மூலம் அறிய வேண்டியது:
ஒருவர் புகழ்ச்சிக்குரியவர் என்றாலும் கூட, 'அவர் நல்லவர்' என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் சுவனத்திற்கு செல்வார் என்று கூறும் உரிமை நமக்கு இல்லை.
உண்மையில் நல்லவர் என புகழப்படுவரின் மனதுக்குள் ஒளிந்திருக்கும் அந்தரங்கத்தை அறியும் சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு.