தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/நல்லாட்சி

நல்லாட்சி

நல்லாட்சி


ADDED : டிச 02, 2022 02:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2022 02:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்கள் தனது ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்ள ஆசை பட்டார் மன்னர். மந்திரியை அழைத்துக் கொண்டு மாறுவேடத்தில் முக்கிய வீதி வழியாக சென்றனர். அப்போது ஒரு பெரியவரிடம் ''மன்னர் இறந்து விட்டார் தெரியுமா'' எனச் சொன்னார் அமைச்சர். ''நல்லாட்சி புரிந்தவர். புண்ணியவான் போய்விட்டார்''என புலம்பி அனுதாபப்பட்டுச் சென்றார் அவர். அங்கிருந்து இதைக் கேட்ட தயிர் விற்கும் சிறுமி அரண்மனையில் மன்னருக்கு அஞ்சலி செலுத்த அதிகமான மக்கள் வருவார்கள். அங்கு நிறைய தயிர் விற்பனையாகும் என சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

மன்னருக்கோ குழப்பம். ''யார் சொல்லுவதை நம்புவது''என மந்திரியிடம் கேட்டார். அவரோ! மன்னா அவரவர் பக்குவத்திற்கு தகுந்தாற்போல பேசுகிறார்கள். உங்கள் மனம் என்ன சொல்லுகிறதோ அதுவே உண்மை தாங்கள் நல்லாட்சி தான் செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என உணர்த்தினார் அமைச்சர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us