
யாராவது ஒருவர் அந்த ஊரில் மட்டும் நல்ல செய்தி சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள். அதனை மூடநம்பிக்கை என கருதினார் முல்லா. அங்குள்ளவர்களுக்கு புத்தி கற்பிக்க நினைத்தார். ஒருநாள் அவர் சந்தையில் மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதியில் நின்று கொண்டு 'அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்கு அருமையான நல்ல செய்தி ஒன்றை கூறப்போகிறேன் எனக்குப் பரிசு தருவதற்காக பணம் வசூலியுங்கள்' என சத்தமாகச் சொன்னார். முல்லா செய்தி என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்று நம்பிய மக்கள் அவசரமாக பணம் வசூலித்து கணிசமான தொகையை அவரிடம் கொடுத்தனர்.
அந்த தொகையை வாங்கிய முல்லா மக்களை நோக்கி நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான். இந்த முல்லா ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கிறார் எனக் கூறி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மக்களும் திருதிரு என விழித்துக் கொண்டே சென்றனர்.

