தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி

ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி

ஹேப்பி.. இன்று முதல் ஹேப்பி


ADDED : நவ 29, 2021 10:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2021 10:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமா.. என பிறரிடம் கேட்டால், 'வேண்டும்' என்று சொல்வார்கள். இதே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா.. என கேட்டால், பதில் சொல்லத்தெரியாமல் விழிப்பார்கள். உண்மையில் மகிழ்ச்சி எங்கே உள்ளது என யோசிக்கிறீர்களா...

வியாபாரி ஒருவர் கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மீனவர் தன் வலை அருகில் படுத்துக்கொண்டு பாடிக்கொண்டிருந்தார். அவரிடம், ''இன்று ஏன் மீன் பிடிக்க போகவில்லை தம்பி'' எனக்கேட்டார் வியாபாரி.

''நான் நேற்றே மீன்களை பிடித்து, நல்ல விலைக்கு விற்றுவிட்டேன். அதனால் ஓய்வெடுக்கிறேன்'' என்றார்.

''இன்றும் மீன்களை பிடித்தால் பணம் கிடைக்குமே.. அதை வைத்து நிறைய பொருட்களை வாங்கி சந்தோஷமாக இருக்கலாமே'' எனக்கேட்டார் வியாபாரி.

''இப்போதும் நான் சந்தோஷமாகத்தானே இருக்கேன்'' என்றார் மீனவர்.

பார்த்தீர்களா.. பொருட்களை சேர்த்துக்கொண்டே போவது சரியா... அவை சிலருக்கு தேவையாக இருக்கலாம். சிலருக்கு தேவையற்றவை. இதிலிருந்து என்ன தெரிகிறது. சந்தோஷம் என்பது பொருளைச் சார்ந்தது அல்ல. மனதை சார்ந்தது. இங்கே பொருள் சேர்ப்பதை தவறாக கூறவில்லை. பொருளாதார வளர்ச்சி முக்கியமே. ஆனால் அதை எந்த அளவில் நிறுத்திக்கொள்வது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே ஒவ்வொரு நாட்களையும் மகிழ்ச்சியாக கொண்டு செல்லுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us