
அழகான பெண்ணை மன்னர் ஒருவர் திருமணம் செய்து கொள்ள நினைத்தார். அவளிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
அதை விரும்பாத அப்பெண் தன் நிலையை எடுத்துக்கூறினார். விடாப்பிடியாக திருமணத்தில் குறியாக இருந்தார் மன்னர். அதற்கு அப்பெண்ணோ, ''எனக்கு ஒரு மாதம் தவணை கொடுங்கள் அதன் பிறகும் என்னை தங்களுக்கு பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம்'' என மன்னரிடம் சொன்னாள். அதன்படி, பல நாட்கள் பட்டினி இருந்தாள், பேதி மாத்திரை சாப்பிட்டாள். அதனால் அவளின் அழகு நிலை குலைந்து போனது. அவளது அழகிய உடல் எலும்புக்கூடாக மாறியது. அரண்மனைக்கு வந்த அவளிடம் மன்னரோ, ''நீ யார்'' எனக்கேட்டார்.
அதற்கு ஒருமாதத்திற்கு முன் ''தாங்கள் தான் என்னை திருமணம் செய்து கொள்வதாக சொன்னீர்கள்'' என்றாள் அவள்.
பெண்ணே, ''வெறும் நிலையில்லா உடல் மீது பற்று வைத்த எனக்கு பாடம் கற்றுக் கொடுத்து விட்டாய் என்னை மன்னித்து விடு'' என்றார் மன்னர்.

