ஒரு ஊரில் நுாறு வயதுக்கு மேலும் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்ற ரகசியம் தான் என்ன என்பதை அறிய வழிப்போக்கர் போல அரசு அதிகாரி ஒருவர் அங்கு புறப்பட்டார். அவர் எதிரே அறுபது வயதுடைய பெரியவர் அழுது கொண்டே வந்தார். அவரிடம், ''ஏன் அழுகிறீர்கள்'' என கேட்டார் வழிப்போக்கர்.
''என் தந்தை என்னை அடித்துவிட்டார்'' எனப் பதில் சொன்னார். ''வாருங்கள் நியாயம் கேட்போம்'' என சொல்லி அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். இவர்களை பார்த்தவுடன் எண்பது வயதுடைய அவரது தந்தை இவன் என்ன காரியம் செய்தான் தெரியுமா... நுாறு வயதுடைய இவனது தாத்தாவை துாக்கி கட்டிலில் படுக்க வைக்கிறேன் என்று கீழே போட்டு விட்டான். இதற்கு இவனை கொஞ்சவா செய்யணும் என்றார். அந்த நேரத்தில் அவரது குரல் உள்ளே ஒலிக்க அறைக்குள் சென்றார் அப்பா. சொர்க்கம் செல்வதற்கான நுழைவுச்சீட்டு பெற்றோர்களை வயதான காலத்திலும் நன்றாக பராமரிப்பது தான் என்ற நபிகள் நாயகத்தின் வார்த்தை வழிப்போக்கரான அதிகாரியின் காதில் ஒலித்தது.

