நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துடுக்கான பெண் தான் அந்தச்சிறுமி. தன் வீட்டு மாடி மீது இருந்து கொண்டு வீதியில் வருவோர் போவோரிடம் குறும்புத்தனம் செய்வது அவளது வழக்கம். ஒருநாள் அவ்வழியே வந்த பொறுமையே வடிவான நாயகத்தின் மீது குப்பைகளை கொட்டி சந்தோஷப்பட்டாள். இப்படி தொடர்ந்து செய்த அந்தச் சிறுமி அங்கு சிலநாள்களாக காணவில்லை. அவ்வீட்டிற்கு சென்று விசாரித்தார். அவள் தீராத காய்ச்சலால் அவதிப்படுகிறாள் என தெரிந்து கொண்டார். அப்போதே அவள் அதிலிருந்து மீள இறைவனிடம் வேண்டினார். குணமடைந்த அவள் நாயகத்திடம் மன்னிப்பு கேட்டாள். அவளுக்கு நற்பண்புகளை எடுத்துச் சொன்னார்.

