
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாயகத்தை நோக்கி வேகமாக வந்த சிறுவன் அவருக்கு வணக்கம் செலுத்தினான். அவரிடம் என்னை நாட்டைக் காக்கும் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றான். அதற்கு அவனிடம் பெற்றோர் இருக்கிறார்களா எனக்கேட்டார். உள்ளார்கள் எனச் சொன்னான் அவன். அப்படியானால் அவர்களுக்கு பணிவிடை செய். அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள். போர்படையில் சேர்ந்தவர்களுக்கு இறைவன் என்னென்ன வெகுமதிகள் வழங்குவானோ அவை எல்லாம் உனக்கு அப்படியே கிடைக்கும். உரிய நேரத்தில் உன்னை படையில் சேர்த்துக்கொள்கிறேன் என்றார். மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பினான்.

