
ஒருவர் செங்கல், மணல், சிமென்ட் போன்ற பொருட்களை கொண்டு கொத்தனார், சித்தாள் உதவியுடன் கட்டடத்தினை உருவாக்குவார். குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் சாரக்கம்புகளை, பரப்பி அதன் மீதேறி அக்கட்டடத்தின் மற்ற வேலைகளையும் பூர்த்தி செய்வார். அதன்பின் அதனை பிரித்து எடுத்து கட்டடத்தின் ஓரத்தில் வைப்பார். திறப்புவிழா நாளில் வாழைமரத்தை வைத்து அழகுபடுத்துவர். விழா முடிந்தவுடன் அதனையும் அப்புறப்படுத்தி விடுவர். அடுத்த கட்டடத்தை எழுப்புவதற்கு சாரக்கம்புகளை தயார் படுத்திக்கொண்டிருப்பார் கொத்தனார்.
அது போலத்தான் ஒருவர் மற்றவர்களுக்காக செய்யும் உண்மையான உதவியும் உழைப்பும் இந்த சமூகத்திற்கு தெரியாமலே இருக்கும். அதற்காக அவர் சோர்ந்து விட மாட்டார். அவர் பணியை அவர் இயல்பாக செய்து கொண்டே இருப்பார். அவரை தேடிப்பிடித்து பாராட்டுவோம். அவரை மகிழ்ச்சிப்படுத்துவோம்.

