
தன் வலிமையை காட்ட நினைத்த இளைஞன் பாலைவனத்தில் வேகமாக நடந்து சென்றான். மக்கள் கூட்டங்களை கடந்து சென்ற அவன் வேறு எங்குமே நிற்கவில்லை. அதனால் அவனுக்கு உடலில் சோர்வு ஏற்பட்ட ஒருஅடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. களைப்பின் மிகுதியால் ஒரு மணல் மேட்டில் சரிந்து விழுந்தான். அவனை கடந்து சென்ற கூட்டத்திலுள்ள ஒரு பெரியவர் அவன் நிலையை பார்த்து புரிந்து கொண்டார்.
அவனிடம் சென்று இளைப்பாறுவதற்கான தகுந்த இடம் இது இல்லை எனக் கூறி அவனைப் புறப்படச் சொன்னார். அவனால் நகரக்கூட முடியவில்லை என்பதை தெரிந்து கொண்ட பெரியவர் அவனை மற்றவர்கள் உதவியுடன் ஒட்டகத்தில் ஏற்றினார். குளிர்ந்த மரநிழலில் ஒதுங்கிய பெரியவர், ''அவனிடம் எடுத்த எடுப்பிலே துள்ளிக்குதித் தோடும் குதிரை விரைவிலே சோர்ந்து விடும். ஆனால் அடிமீது அடி வைத்து நடக்கும் ஒட்டகம் எவ்வளவு நாட்கள் ஆனாலும் களைப்பு அடையாது இப்போது புரியும்'' என நினைக்கிறேன் என்றார் பெரியவர். தவறை உணர்ந்தவன் இனி நிதானமாக நடந்து கொள்கிறேன் என அவர்களோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.

