
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழிப்போக்கன் ஒருவர் தனது நிறைமாதக்கர்ப்பிணியுடன் சொந்த ஊரிலிருந்து வேறு இடத்திற்கு பயணமானார். அவளுக்கு வழியில் பிரசவவலி அதிகமானது. எதிரே தம்பதியர் இருவர் வருவதைக்கண்ட வழிப்போக்கர் அவர்களிடம் நிலைமையை சொன்னார். அன்பு வடிவம் கொண்ட அவரின் மனைவி சூழலைப்புரிந்து கொண்டு பிரசவம் பார்த்தார். அறிமுகமே இல்லாதவர்களுக்கு அவசியமான உதவியை செய்தது நாயகமும் அவரது மனைவியாரும் தான். இவ்விபரம் தெரிந்த வழிப்போக்கன் நாயகத்திடம் சென்று நன்றி தெரிவித்தார். குழந்தையுடன் அத்தம்பதி நீண்ட நாள் ஆரோக்யமாக வாழ்ந்தனர்.

