ADDED : டிச 26, 2022 02:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் ''தேர்வில் முதல்மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும்'' என அவளது தாயிடம் கேட்டாள். குறிக்கோளுடன் படிக்க வேண்டும் என்றாள் தாய். புரிகிற மாதிரி சொல்லுங்கம்மா என கேட்க அதற்கு வீட்டில் இருந்த வடை ஓன்றை எடுத்து கூரையில் எறியச் சொன்னாள் தாய்.
வடையை கொத்திப்பறந்தது காக்கா. அரிசியை எடுத்துச் துாவச் சொன்னாள். பறந்து வந்த குருவி, அதனைக் கொத்தித் தின்றது. அதன்பிறகு வாசலில் சோறு எடுத்து வைத்தாள். எங்கிருந்தோ வந்த நாய் அதனை சாப்பிட்டது.குறிக்கோள்னா எது என்பது இப்போது புரிகிறதா என தாய் கேட்க, ஆர்வமுடன் படித்து தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பேன் என்றாள் மகள்.

