
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என புதிதாக அந்த ஊருக்கு வந்த ஞானியிடம் கேட்டார் இளைஞர் ஒருவர்.
அவரோ ஒரு பெட்டியை கொடுத்து இதில் நான்கு பொக்கிஷம் உள்ளது. இதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ் எனச் சொன்னார். பெட்டியை திறந்து பார்த்த போது அதில் கடிகாரம், ஒரு நாணயம், சிப்பிக்குள்முத்து இருந்தன.
ஒன்றும் புரியாததால் ஞானியிடமே விளக்கம் கேட்டான். அதற்கு அவர், ''நேரத்தை சரியாக பயன்படுத்து, சம்பாதிக்கும் பணத்தை சரியான முறையில் செலவு செய், பேசும் வார்த்தைகளை அளந்து பேசு உன்னுடைய வாழ்வு மகிழ்ச்சியாய் அமையும்'' என்றார் ஞானி. புரிந்து கொண்ட அவனும் பொக்கிஷம் மூன்றை மட்டுமே தெரிவித்தீர்கள். மீதமுள்ள ஒன்று எது எனக்கேட்டான். அதற்கு இம்மூன்றையும் சரியாக பயன்படுத்துபவரே மகிழ்ச்சியாக வாழ்வார் இதுவே நாலாவது பொக்கிஷம் என்றார் அவர்.

