தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/உலகில் சிறந்தது...

உலகில் சிறந்தது...

உலகில் சிறந்தது...


ADDED : ஜூன் 03, 2022 12:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2022 12:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முல்லாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த மன்னர் ஒருவர் எப்போதும் அவரை கூடவே வைத்திருந்தார். ஒருநாள் இருவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அன்று மன்னருக்கு அதிகமான பசி. உணவில் பீன்ஸ் கறி பறிமாறப்பட்டது.சாப்பாட்டின் இடையே மன்னர் உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது முல்லா நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது” என்று ஆமாம் போட்டார் முல்லா. மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து ” இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் பீன்ஸை உணவுடன் சேர்த்து விடு” என்று உத்தரவிட்டார்.

அதன்படி தொடர்ந்து பீன்ஸை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அதன் மீது சலிப்பு ஏற்பட்டது. அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் கறி பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி ” உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர்; என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார்.

ஆமாம் மன்னா எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த அளவில் மோசமான,சுவையே இல்லாத காய்தான் பீன்ஸ் என்றார். என்ன முல்லா! பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர்கள். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே” என்று கேட்டார் மன்னர். சிரித்துக் கொண்டே என்ன செய்வது? மன்னா! நான் தங்களிடம் தானே வேலை பார்க்கிறேன். பீன்ஸிடம் இல்லையே என்றார் முல்லா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us