
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருநாள் நாயகத்தை சந்தித்த ஏழை ஒருவர், ''பொருள் இல்லாமல் எனது வாழ்க்கை சிரமமாக செல்கிறது. பிற்காலத்தில் என் மகன் சந்தோஷமாக வாழ நிறைய செல்வம் சேர்த்து வைக்க விரும்புகிறேன். ஆனால் அது எப்படி என்னால் முடியும்'' எனக்கேட்டார்.
''உங்கள் மகன் என்ன செய்கிறான். பொறுப்பாக இருப்பானா'' என ஏழையிடம் கேட்டார்.
''படிக்கிறான். பொறுப்பாக இருப்பான். ஒழுக்கமாக இருப்பதை கற்றுக்கொடுத்திருக்கிறேன்'' என்றார்.
''கவலைப்படாதீர்கள். உங்கள் மகனுக்கு தேவையான செல்வத்தைத்தான் கொடுத்திருக்கிறீர்கள்'' என்றார். நாயகத்தின் பதிலைக்கேட்டு அவர் புரியாமல் விழித்தார்.
''நல்ல ஒழுக்கமே ஒருவருக்கு மேலான செல்வமாகும்'' என்றார்.

