ADDED : டிச 17, 2021 12:21 PM

குடித்து விட்டு மனைவி, குழந்தைகளை துன்புறுத்துவது, பெற்றோர்களை மதிக்காமல் இருப்பது என பல பாவங்களில் மனிதன் ஈடுபடுகிறான். இதே துன்பப்படும்போது, 'நான் செய்த பாவத்திற்கான பலனை இப்போது அனுபவிக்கிறேன்' என புலம்புவான். இதனால் யாருக்கும் பயன்இல்லை. சரி இதற்கு தீர்வுதான் என்ன என்று கேட்கிறீர்களா...
செய்த பாவத்திற்கு மனம் திருந்தி, இனி பாவம் செய்ய மாட்டேன் என்பதே இதற்கு ஒரே வழி. பிறரது துன்பத்தை போக்க பணம் கொடுப்பது தான் உதவி என நினைக்க வேண்டாம்.
ஒருவன் தான் செல்லும் பாதையில் இருந்த, முட்கள் நிறைந்த மரக்கிளையை அப்புறப்படுத்தினான். அதற்காக அவனது பாவங்களை மன்னித்தான் இறைவன்.
அந்தப் பாதையில் அவனுக்கு முன்பாக எத்தனையோ நபர்கள் சென்றிருப்பார்கள். முள்ளைப் பார்த்து ஒதுங்கினார்களே தவிர அப்புறப்படுத்த முன்வரவில்லை. பாதையில் இனி செல்ல இருப்போரின் பாதங்களைப் பாதுகாத்ததால் முள்ளை அப்புறப்படுத்தியவரின் பாவம் மன்னிக்கப்பட்டது. இனியாவது உங்களால் முடிந்த நல்ல செயல்களை செய்யுங்கள்.

