ADDED : டிச 14, 2022 11:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளைஞர் ஒருவருக்கு கடுமையான பசி மயக்கம். வெளியில் சென்ற அவருக்கு எங்கும் உணவு கிடைக்கவில்லை. வழியில் இருந்த ஒரு தோட்டத்திற்குள் சென்றார். பசி மயக்கத்தில் இருந்த அவர் அங்கு ஒரு மரத்தில் பழுத்திருந்த பழத்தை பறித்து சாப்பிட்டார். ஆனால் அவருடைய மனம் குற்ற உணர்வால் வருந்தியது. “அந்த தோட்டம் யாருடையது ? என விசாரித்து உரிமையாளரிடம் சென்று, நடந்ததைக் கூறி என்னை மன்னியுங்கள்'' எனக் கேட்டார். பிறகு கெஞ்சவும் செய்தார். காதில் வாங்காமல் வெளியே சென்ற உரிமையாளர் பல மணிநேரம் கழித்து வந்தார். அப்போதும் அங்கேயே நின்று கொண்டிருந்தார் இளைஞர். அவரின் மன உறுதியை கண்ட அவர் மன்னித்தார். அவரின் பொறுமைக்கு பரிசாக ஒரு கூடை நிறைய பழங்களை கொண்டு வந்து கொடுத்தார். பெற்றுக்கொண்ட இளைஞர் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.

