
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலை மீது வசிக்கும் ஞானியை பார்த்தாலே துன்பம் நீங்குகிறது. நல்லது நடக்கிறது என்ற செய்தி அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் பரவியது. எதைச் செய்தாலும் நிறைவு காணாத அந்த இளைஞனும் அவரை பார்க்க சென்றான்.
அங்கு இருந்த அவரிடம் வேண்டுமென்றே ஏய், கிழவா ஞானியை பார்க்க வேண்டும். அவர் எங்கிருக்கிறார் எனக்கேட்டான். அருகே அழைத்து அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு
குடிசையின் பின்புற வாசல் வழியே அனுப்பி வைத்தார். அவனோ மீண்டும் அவரிடம் சென்று பணிந்தவாறு வணக்கம் செய்தான். ஆமாம். ஞானியின் பார்வை பட்டாலே அவருக்கு நல்லது நடக்கிறது என்பதை உணர்ந்தான் இளைஞன்.

