sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

திரும்புங்கள் இறைவன் பக்கம்

/

திரும்புங்கள் இறைவன் பக்கம்

திரும்புங்கள் இறைவன் பக்கம்

திரும்புங்கள் இறைவன் பக்கம்


ADDED : மே 30, 2016 09:30 AM

Google News

ADDED : மே 30, 2016 09:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குர்ஆனை படிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும். குர்ஆனை படிப்பவர் இறைவனுடன் பேசிக் கொண்டிருப்பதாக பொருள்.

“ஒருவர் திருக்குர்ஆனை ஓதுவதிலேயே முழுமையாக ஈடுபட்டு இருக்கிறார்.

என்னிடம் துஆ (பிரார்த்தனை) புரிவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை என்றாலும், என்னிடம் வேண்டிப் பிரார்த்திப்போரை விட, இத்தகைய அடியானுக்கு அவன் (இறைவன்) என்னிடம் கேட்காமலேயே அதிகமாக (நன்மை) வழங்குகிறான்,” என்று நபிகள் நாயகம் கூறுகிறார்.

இதில் இருந்து குர்ஆன் ஓதுவது, தொழுகையை விட உயர்ந்தது என்பது தெரிய வருகிறது. மேலும், “திருக்குர்ஆனை ஓதும் ஒரு அடியவர், மற்றவர்களை விடவும் அல்லாஹ்விடம் அதிக நெருக்கத்தைப் பெறுகின்றார்,” என்கிறார் நாயகம்.

குர்ஆனிலுள்ள சில முக்கிய கருத்துக்களைப் பார்ப்போமா!

* மனிதர்களைப் படைத்து வாழ்வாதாரம் வழங்கியதோடு நின்றுவிடாமல், தன் தூதர்கள் வாயிலாக அவர்களை நேர்வழியில் செலுத்தும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டான். நேர்வழியை அருள்வதும் இறைப் பண்புகளில் ஒன்றாகும்.

* இறைவன் எத்தகையவன் எனில், அவன்தான் யாவற்றையும் படைத்து செம்மையாக்கினான். மேலும், (அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து நேர்வழி காட்டினான்.

* இறைவன் தன் அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கிக் கொண்டிருக்கிறான். உங்களை இருள்களில் இருந்து வெளியேற்றி

ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக! உண்மை யாதெனில், இறைவன் உங்கள் மீது பரிவும் கருணையும் கொண்டவனாகஇருக்கின்றான்.

* உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச் செய்துவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக்கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால், திண்ணமாக இறைவன் (அவரை) மன்னித்து விடுகின்றான். மேலும் அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான்.

* இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்து விடாதீர்கள். திண்ணமாக, இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். திரும்பி விடுங்கள் உங்கள் இறைவனின் பக்கம்!






      Dinamalar
      Follow us