ADDED : மே 01, 2016 11:22 AM

கூட்டத்தில் பேசும் போதோ, மற்றவர்களிடம் பேசும் போதோ, எப்படி பேச வேண்டுமென
குர்ஆன் சொல்லியுள்ளது.
இதோ பேச்சுக்கான கட்டளைகள்:
* தேவையிருந்தால் மட்டும் பேசுங்கள்.
* நன்மை தரும் பேச்சை மட்டும் பேசுங்கள்.
* மலர்ந்த முகத்துடன் கண்ணியமாக பேசுங்கள்
* மென்மையான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.
* மற்றவர் கேட்க முடியாத அளவுக்கு தாழ்ந்த குரலில் பேசாதீர்கள்
* பிறர் பயப்படும்படி உரக்கவும் பேசாதீர்கள்
* பிறர் மனம் வலிக்கும்படி பேசாதீர்கள்
* பிறரை கேலி செய்யும் வகையில் பேசாதீர்கள்
* பிறருடைய குறைகள் பற்றி பேசாதீர்கள்.
* நீதி தவறாமல் பேசுங்கள்
* தீய பேச்சால் நாக்கை கறைப்படுத்தாதீர்கள்
* உங்கள் நாக்கு கோள் சொல்லக்கூடாது
* பொய்யான வாக்குறுதிகளை வீசாதீர்கள்
* யாருக்கும் பட்டப்பெயர் வைக்காதீர்கள் இதையெல்லாம் மீறி, தேவையில்லாமல் பேசுவது மதிப்பைக் குறைக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர் உடனடியாக பதிந்து கொள்கிறார். நம் இறப்புக்குப் பின்,
“இவர் இன்ன வார்த்தையைப் பேசினார்,” என்று இறைவனிடம் அவர் சொல்வார். அது நல்ல வார்த்தையாக இருந்தால், நாம் பலனடைவோம். மோசமானதாகவோ, தேவையற்றதாகவோ,
பலனற்றதாகவோ இருந்தால், இறைவனின் கோபத்திற்கு ஆளாவோம்.