
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேவை உள்ளோருக்கு வழங்குவதே சிறந்த தானம்.
*இறைவனுக்குரிய கடமைகளை செய்வதோடு உறவினருக்கான கடமைகளையும் செய்யுங்கள்.
* நல்லமுறையில் பழகத் தெரிந்தவனும், நற்குணம் உள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவர்.
* ஏழைகளுக்கு உதவினால் ஒரு நன்மையும், உறவினருக்கு உதவினால் இரண்டு நன்மைகளும் கிடைக்கும்.
* நோன்பு ஒரு கேடயம். அதைக்கொண்டு உங்களை தற்காத்து கொள்ள முடியும்.
* ஆயுட்காலம் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா... உறவினரை கவனியுங்கள்.
* பசித்தவர்களுக்கு உணவு கொடுங்கள். நோயாளிகளை போய்ப் பாருங்கள்.
* உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
* அறிவைத் தேடும் முயற்சியை நிறுத்தாதீர்கள்.
* முதலில் தாய்க்கும், பிறகு தந்தைக்கும், உறவினருக்கும் உதவுங்கள்.
- பொன்மொழிகள்

