நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல வாழ்க்கை, நோய்களில் இருந்து விடுதலை பெற தர்மம் செய்யுங்கள்.
* வாழும்போது கஞ்சனாக இருந்துவிட்டு, மரண வேளையில் கொடை வள்ளலாக மாறும் மனிதன் மீது இறைவன் கோபப்படுகிறான்.
* பாவியாக இருந்தாலும், தர்மம் செய்தால் அவன் இறைவனின் தோழன். தர்மம் செய்யாத கஞ்சன் என்னதான் தொழுகை செய்தாலும் அவன் இறைவனின் எதிரி.
* அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுங்கள்.
* கருணை கொண்டவன் இருக்கும் இடம் சொர்க்கம். கஞ்சத்தனம் கொண்டவன் இருக்கும் இடம் நரகம்.
* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை மூன்றும் நம்மை கொல்லும்.
* பணக்காரனிடம் கஞ்சத்தனமும், ஏழையிடம் தற்பெருமையும், தலைவர்களிடம் அநியாயமும், முதியோர்களிடம் உலக ஆசையும் இருப்பதை இறைவன் வெறுக்கிறான்.
- பொன்மொழிகள்

