ADDED : மார் 15, 2016 02:28 PM
இறைவனுக்கு அஞ்சுவது குறித்து நபிகள் நாயகம் சொன்ன பொன்மொழிகள் இவை.
* மனிதனுக்கு மனிதன் பயப்பட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், அல்லாஹ்விற்கு பயப்பட வேண்டும். அல்லாஹ் மீது கொண்ட பயத்தால் சிந்திய கண்ணீர் துளிகள், இறைவனின் பாதையில் சிந்திய செந்நீர் துளிகளாகும். இந்த இரண்டையும் விட, அல்லாஹ்விற்கு பிரியமானது வேறேதுமில்லை.
* அறிவுகளுக்கு தலைமையானது இறையச்சம் (கடவுள் மீதான பயம்). இறையச்சத்தின் உதவியினாலேயே சகல ஞானங்களும் உண்டாகிறது. எவன் அல்லாஹ்விற்கு பயப்படவில்லையோ, அவனை எல்லாவற்றிற்கும் அல்லாஹ் பயப்படும்படி செய்து விடுவான்.
* உலகில் எவனொருவன் தனக்கு பயப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் மறுமை நாளில் பயந்து நடுங்கக்கூடிய நிலைமையை உண்டாக்குவான். ஆனால் இறைவனுக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் இறப்பிற்கு பின் பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது.