ADDED : டிச 26, 2019 02:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மவழியில் மனிதன் வாழச் செய்யும் போதனைகள் இவை.
* மலர்ந்த முகத்துடன் இருப்பீராக! மலர்ந்த முகத்தவரை இறைவன் நேசிக்கிறான். கடுகடுத்த முகம் கொண்டவர்களை வெறுக்கிறான்.
* இறந்த அன்பர்களுக்காக தானமும் தர்மமும் செய்வீராக! அதன் நன்மைகளைச் சுமந்து சென்று வானவர்கள் இறைவனிடம் சேர்ப்பார்கள். ''எங்களின் மண்ணறையை ஒளிவாக்கிய பிள்ளைகளுக்கு பாவ மன்னிப்பு அளிப்பாயாக'' என இறந்தவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். இல்லாவிட்டால் ''நாங்கள் விட்டுச் சென்ற செல்வங்களை அனுபவித்துக் கொண்டு எங்களை மறந்தவர்களுக்கு சாபம் உண்டாகட்டும்'' என சபிப்பர். .
* பார்க்கும் திறனற்றவர்களுக்கு உதவி செய்பவரின் 100 குற்றங்கள் மன்னிக்கப்படும்.
* உமது செல்வங்களைக் கண்டு பெருமை கொள்ளாதீர். பிறர் பொருளுக்கு சிறிதும் ஆசைப்படாதீர்.