நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனம்போன போக்கில் நடக்காமல், மறுமைக்கு தேவையானதை செய்யுங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
* கேட்டதை எல்லாம் உண்மை என்று நம்பாதீர்கள்.
* பணம், பதவி இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள்.
* புன்னகை செய்யவும், நன்றி சொல்லவும் மறக்காதீர்.
* ஒருவர் சொன்னதை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்.
* அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
* தேவைக்கு அதிகமாக எதையுமே எதிர்பார்க்காதீர்கள்.
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை கைவிடுங்கள்.
* எந்தவொரு பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பேசாதீர்.
- பொன்மொழிகள்

