ADDED : மார் 02, 2018 10:50 AM

உங்கள் குழந்தைகள், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் யாரைச் சந்தித்தாலும், அவர்களுக்கு நாயகம் சொன்ன, 'வாழ்வில் பிடிப்பு வைக்க கூடாது' என்ற அறிவுரையை சொல்ல வேண்டும்.
நிலையற்ற இந்த வாழ்க்கை பற்றி, சுனாமி போன்ற அனுபவங்களால் உணர்ந்துள்ளோம். எனினும் காலம் அவற்றை மறக்கடித்து விடுகிறது. இதோ அந்த அறிவுரைகள்.
* நீங்கள் தொழும்போது, இவ்வுலகத்தை விட்டு விடைபெற்று செல்லும் மனிதனின் மனநிலையில் தொழுங்கள்.
* ஒருவரை பற்றி பேசி விட்டு, மறுநாள் வருத்தம் தெரிவிக்கும் படியான எந்த வார்த்தையையும் பேசாதீர்கள்.
* மக்களிடம் உள்ள பொருளைக் குறித்து நிராசை அடையுங்கள். (பிறர் பொருளை கவர நினைக்காதீர்கள்)
இந்த அறிவுரைகளை கீழிருந்து மேலாகப் படித்தால் ஒரு உண்மை புரியும். பொருள் மீதான பற்றைக் குறைத்தால், தேவையில்லாத வார்த்தைகள் வராது. பேச்சு குறையும் போது, மனிதமனம் இறைவனிடம் லயிக்கும். தொழும்போது இறைவனிடம் பொருட்களை கேட்காமல் நற்கதியை கேட்கும் மனோநிலை ஏற்படும். சரி தானே!