sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பணமிருந்தாலும் பணிவு அவசியம்

/

பணமிருந்தாலும் பணிவு அவசியம்

பணமிருந்தாலும் பணிவு அவசியம்

பணமிருந்தாலும் பணிவு அவசியம்


ADDED : மார் 14, 2018 03:58 PM

Google News

ADDED : மார் 14, 2018 03:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பணம், பதவி உங்களிடம் இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் இன்னும் பெரிய பதவிகள் உங்களை தேடி வரும். பிரச்னை வரும் போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சை துவக்குங்கள்.

* நானே பெரியவன், சிறந்தவன் என்ற அகந்தையை கைவிடுங்கள். எந்த பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள். நீங்கள் சொன்னதே சரி என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கு கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கு கேட்டதை இங்கே சொல்வதையும் கைவிடுங்கள்.

* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் உணர்ச்சி வசப்பட்டு நம்பி விடாதீர்கள். அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்.

* உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். எதையும் தேவைக்கு அதிகமாய் எதிர்பார்க்காதீர்கள். அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை கைவிடுங்கள்.

* புன்னகை செய்யவும், சின்னச்சின்ன அன்புச்சொற்களைக் கூறவும், நன்றி சொல்லவும் மறந்து விடாதீர்கள்.

* நாக்கு நேர்மையாக இருக்குமானால் ஒருவனுடைய இதயம் நேர்மையான வழியில் செல்லும்.






      Dinamalar
      Follow us