நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று.
* பொறாமை உணர்ச்சியால் நயவஞ்சகன் பாதிக்கப்படுகிறான்.
* சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்லாதீர்கள்.
* பிறரைக் கட்டாயப்படுத்தி மரியாதை பெறுபவன், இறைவனின் கட்டளையை மீறுகிறான்.
* கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மனிதர்களில் மேலானவர்.
* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையும் கவனிக்கிறான்.
* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.
* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள்.
* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.
* எந்த பிரச்னையையும் நாசுக்காக கையாளுங்கள்.
* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
- பொன்மொழிகள்

