ADDED : ஆக 13, 2014 12:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழ்மை ஒருவரைத் தேடி வருவதற்கு காரணங்கள் இருக்கின்றன.
* எந்த வீட்டில் குழந்தைகள் திட்டப்படுகிறார்களோ, அந்த வீட்டை நோக்கி வறுமை நிச்சயம் வரும். குறிப்பாக, குழந்தைகளை 'நீ செத்துப்போ' என எக்காரணம் கொண்டும் திட்டக்கூடாது. நிச்சயமாக அந்த வார்த்தை வறுமையை உண்டாக்கும்.
* அளவுக்கதிகமான ஆடம்பர உடைகளை அணிபவர்கள் வீட்டிலும், பெருமைக்காக ஆடை அணிகிறவர்களுக்கும் வறுமை உண்டாகும்.
* வீட்டில் சிலந்திப் பூச்சிகள் இருந்தால் அவற்றை அகற்றி சுத்தம் செய்யுங்கள். அதனை வீட்டில் வைத்திருந்தால் அது வாழ்க்கையில் வறுமையை இழுத்து வரும்.