
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன் உழைப்பால் கிடைக்கும் உணவே சிறந்தது.
* ஏழைகளுக்கு தானம் செய்தால் நன்மை கிடைக்கும்.
* சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோய்.
* மனைவிக்கு ஆசையோடு ஒரு கை அளவாவது உணவு ஊட்டினால் நன்மை கிடைக்கும்.
* அனாதைகளின் பொருட்களை திருடாதே.
* சாப்பிட்டதும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
* அண்டைவீட்டார் பசித்திருக்க நாம் மட்டும் உண்பது தர்மம் ஆகாது.
* வயிறு புடைக்க உண்ணாதீர்கள்.
* அனைவரும் சேர்ந்து உணவு சாப்பிடுங்கள்.
* உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும் வலது கையை பயன்படுத்துங்கள்.
- பொன்மொழிகள்

