ADDED : மார் 27, 2023 09:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ விரும்பினால் உழைப்பது ஒன்றுதான் வழி. இப்படி உழைக்கும் திறன் கொண்டவர்கள் பிறரிடம் யாசகம் கேட்கக்கூடாது. அது சுயமரியாதையை கெடுப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இது குறித்து நபிகள் நாயகம் கூறுகிறார்.
* நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் தான தர்மம் அனுமதிக்கப்பட்டதல்ல.
* சொத்தை அதிகப்படுத்துவற்காக மக்களிடம் யாசகம் கேட்பவருடைய, முகத்தில் மறுமை நாளில் கோரமான அடையாளங்கள் இருக்கும். நரகத்தின் நெருப்புக்கங்குகளையே அவர் உண்ணுகின்றார்.
* முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்றுப் பிழைப்பது என்பது, யாசகம் கேட்பதை விடச் சிறந்தது.

