நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசர் ஒருவரிடம் வைரக்கல் ஒன்று இருந்தது. அதை நாட்டின் பெருமைக்குரிய பொருளாக கருதினார். ஒருநாள் அதன் மீது கீறல் விழுந்தது. அதை சரிசெய்யும்படி பொற்கொல்லர்களிடம் கட்டளையிட்டார். அவர்களோ, 'வைரத்தை சரிசெய்ய முடியாது. இன்னும் விரிசல் கூடும்' என்றனர்.
ஆனால் ஒருவர் மட்டும், ''அரசே! வைரத்தின் மதிப்பை இன்னும் உயர்த்த முடியும். அதை தாருங்கள்'' என சொன்னார். மீண்டும் அரசரை சந்திக்க வந்த பொற்கொல்லர் வைரத்தை காட்டினார். வைரத்தின் மீது அழகான ரோஜாசெதுக்கப்பட்டிருந்தது. அதாவது ரோஜாவின் காம்பாக கீறல் மாறியது.
பார்த்தீர்களா... இதுபோல் பிரச்னைகளை புதிய நோக்கில் அணுகினால் தீர்வு கிடைக்கும் அல்லவா.

