
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சில நேரங்களில் குடும்பத்தில் தந்தை மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார். நம்மீது அக்கறையுடன் அவர்கள் வழங்கும் அறிவுரை எரிச்சலுாட்டும்; கோபத்தை துாண்டும். இது ஆரோக்யமான செயல் அல்ல. வீட்டில் உள்ள சிறியவர் தவறு செய்தால் அவர்கள் திருந்துவதற்கு பெரியவர்கள் கோபப்பட்டுக் கொள்வர். அது சீராக தண்ணீர் ஓடுகின்ற ஆற்றின் நடுவே ஒரு கல்லை எறிந்தால் தண்ணீரினை கிழித்துக் கொண்டு கிழே விழும். கல் பட்ட இடம் கணப்பொழுதில் மறைந்து விடும். அது போலத்தான் பெரியவர்களின் கோபம். அவர்கள் என்ன காரணத்திற்காக கோபப்படுகிறார்கள் என சிந்தித்தால் உறவுகளுக்கிடையே ஏற்படும் விரிசல்களை தவிர்க்கலாம்.