நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன்னைச் சரணடைந்த மனிதர்களைப் பாதுகாக்கும் பொறுப்பாளி இறைவனே. எந்த தீயசக்தியாலும் அவர்களை நெருங்க முடியாது. இறைத்துாதர்கள் தங்களின் வாழ்வில் குறுக்கிடும் சோதனைகளை இறைவனின் துணையால் எளிதாக கடந்தனர்.
ஆதம்நபியை (அலை) படைத்த போது மனித சமூகத்தை கெடுப்பேன் என ஷைத்தான் சவால் விட்டான். ஆனால் நல்லடியார்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது' என இயலாமையை ஒப்புக்கொண்டான்.
ஷைத்தானைப் பற்றி குர்ஆன், 'நான் உலகில் கவர்ச்சிகளை ஏற்படுத்தி மனிதர்களை வழிபிறழச் செய்வேன். ஆனால் உன் அடியார்களில் எவர்களை வாய்மையாளர்களாய் நீ ஆக்கினாயோ அவர்களைத் தவிர' என்கிறது.