
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகம் தன் தோழர்களிடம், ''இரும்பின் மீது தண்ணீர் பட்டால் துரு பிடிக்கும். அது போல கெட்ட எண்ணத்தால் மனிதனின் இதயமும் துருப்பிடிக்கும்'' என்றார்.
''இதயத்தின் மீதுள்ள துருவை எப்படி நீக்குவது'' எனக் கேட்டனர்.
''மரணத்தை பற்றி சிந்தித்தாலும், குர்ஆன் ஓதினாலும் நல்ல எண்ணம் உண்டாகும். எப்போதும் இதை நினைவில் கொண்டால் இதயம் துாய்மை பெறும்'' என அறிவுறுத்தினார்.
ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையால் பாவத்தின் பாதையில் மனிதன் செல்கிறான். நாளைக்கு உயிருடன் இருப்போமா, மாட்டோமா என ஒரு நொடி சிந்தித்து பார்த்தால் போதும். மனம் நல்வழியில் திரும்பும்.