நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகத்திடம், ''நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்'' என்றார் ஒருவர்.
அதற்கு, ''அவளுக்கு மஹ்ராகக் கொடுப்பதற்கு உங்களிடம் ஏதேனும் உள்ளதா'' எனக் கேட்டார்.
''இதைத் தவிர வேறு ஆடை இல்லை'' என்றார்.
''நீங்கள் குர்ஆனில் இருந்து ஏதேனும் கற்றுள்ளீர்களா...'' என நாயகம் கேட்டதற்கு, ''ஆம். இந்தந்த அத்தியாயம் கற்றிருக்கிறேன்'' என்றார்.
''நீங்கள் கற்ற குர்ஆன் வசனங்களை அந்த பெண்ணுக்கு கற்றுக் கொடுங்கள். அதுவே திருமணத்திற்கான மஹ்ர். இருவரையும் அங்கீகரிக்கிறேன்'' என்றார்.