நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்சியாளரான ஹஸரத் உமர் நகர்வலம் சென்ற போது, சிறுவனின் அழுகுரல் கேட்டது. குடிசைக்குள் எட்டிப் பார்த்தார் உமர். அங்கு ஒரு பெண்ணும், அவளின் மகனும் இருந்தனர். அவள் விதவை என்பதும், வறுமையால் கஷ்டப்படுவதும் புரிந்தது. மகனை சமாதானம் செய்வதற்காக சமைப்பது போல போக்கு காட்டினாள். உமருக்கு கண்ணீர் வந்தது.
'என் ஆட்சியில் இப்படி ஒரு அவலமா' என வருந்தினார். களஞ்சியத்தில் இருந்து கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருள்களை எடுத்தார். தானே தோளில் சுமந்து அவளின் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது தோழர்கள் சிலர் தாங்கள் சுமந்து வருவதாக தெரிவித்தனர். ''மறுமையில் என் பாவச்சுமைகளை நீங்கள் சுமக்க முடியாது. எனவே இதை நீங்கள் சுமக்கக் கூடாது'' என்றார்.