நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நோயாளியான அபிவக்காஸ் என்பவரை பார்க்க சென்றார் நபிகள் நாயகம். அப்போது அவர், ''என் உடல் நலிந்து விட்டது. என் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தை என் மகளுக்கும், மற்ற இரண்டு பாகத்தை தர்மத்திற்கும் எழுதி வைக்கலாமா அல்லது இரண்டாகப் பிரித்து ஒரு பாகத்தை தர்மம் செய்யலாமா அல்லது மூன்றில் ஒரு பாகத்தை தர்மம் செய்யலாமா' எனக் கேட்டார்.
'வாரிசை பிறரிடம் கை ஏந்தும் நிலைக்கு வைக்காதே. முழுமையாக சொத்தை வாரிசுக்கு கொடுத்து விடு. அவர்களை நல்ல நிலையில் விட்டுச் செல்வது பெற்றோரின் கடமை' என அறிவுறுத்தினார் நாயகம்.