நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதன் தன் தேவைகளை நிறைவேற்ற மற்றவர்களோடு சேர்ந்து வாழ வேண்டி இருக்கிறது. ஆனாலும் ஆன்ம வளர்ச்சி பெறுவதற்கு தனிமை தேவை. மறுமையில் அர்ஷ் நிழலின் கீழ் இடம் பெற நற்பண்புகள் அவசியம். தனிமையில் இறை உணர்வுடன் கண்ணீர் வடித்தவர்கள், ஐம்புலன்களை அடக்கியவர்கள் இதற்கு தகுதியானவர்கள். இவர்கள் கீழ்க்கண்ட நன்மைகளை அடைவர்.
* நாக்கு, கண்ணால் ஏற்படும் விபரீதங்களில் இருந்து காக்கப்படுவர்.
* முகஸ்துதியில் இருந்து தப்பிச் செல்வர்.
* தீயவர்களின் தொடர்பில் இருந்து விடுபடுவர்.
* வீண் சர்ச்சைகளை விட்டு நீங்குவர்.
* உலகியல் ஆசைகளில் இருந்து விலகுவர்.