நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'என்ன வாழ்க்கை இது. தினமும் அவசர அவசரமாக வேலைக்கு போறேன். இரவு வீட்டுக்கு வர்றேன். மெஷின் வாழ்க்கை. என்னை யாரும் புரிஞ்சுக்க மாட்றாங்க' என சில மனிதர்கள் புலம்பிக் கொண்டிருப்பர். உண்மையில் இவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழவில்லை. தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஒரு நிமிடம் ரசித்துப் பார்த்தால் போதும். வீணாக புலம்பத் தேவையில்லை.
இந்த உலகம் அழகானது. அதிகாலையில் பச்சை இலையில் படர்ந்திருக்கும் பனித்துளி. இதமான தென்றல் காற்று. பறவைகள் கீச்சிடும் ஒலி, குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற மழலைப் பேச்சு, சிரிப்பை பார்த்தாலே மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். சந்தோஷச் சாரல் அடிக்கும். இயற்கையை நேசியுங்கள். மனபாரம் குறைவதை உணர்வீர்கள்.