நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலை, நுரையீரலில் இருக்கும் கிருமிகளை தும்மல் வெளியேற்றுகிறது. இது அருட்கொடையாகும். ஆம். அக்கிருமிகள் அங்கேயே இருந்தால் வலி, நோயை ஏற்படுத்தும். இதை சரிசெய்யவே தும்மல் வருகிறது. அதிலும் தும்மும் போது இதயம் சற்று நின்று மீண்டும் இயங்குகிறது. இதயம் நின்று போனால் உடம்பை விட்டு உயிர் பிரியும். ஆனால் இயற்கை நியதியை மீறி இறையருளால் உயிர் கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு முறை தும்மும் போதும் அவனுக்கு நன்றி சொல்வது கடமை.
உங்களில் ஒருவர் தும்மினால் 'அல்-ஹம்து-லில்லாஹ்' என சொல்லட்டும். அருகில் இருப்பவர்கள் 'உமக்கு அருள்புரிவானாக' என சொல்ல வேண்டும். இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் நேசமுடன் வாழ்வார்கள்.