நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபித்தோழியரில் முதலிடம் வகிப்பவர் ருபைதா அல் அஸ்லமி (ரலி). இவர் மருத்துவம், சமூகப் பணிகளில் முன்னோடியாகத் திகழ்ந்தார். 620ல் பிறந்த இவர் மெதீனாவில் உள்ள கஜ்ரஜ் குலத்தின் பனுா அஸ்லம் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மருத்துவரான தன் தந்தையிடம் இருந்து இளமை காலத்திலேயே பயிற்சியைத் தொடங்கினார். பத்ர், உஹத், கைபர், கந்தக் உள்ளிட்ட பல போர்களில் அஸ்லமி பங்காற்றினார். போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார்.
அது மட்டுமல்ல... போர் முடிந்த பிறகும் மருத்துவ சேவையைத் தொடர்ந்தார். மக்களுக்கு சிகிச்சை அளிக்க பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு கூடாரத்தை நிறுவினார். ஆர்வமுள்ள பெண்களுக்கு மருத்துவ பயிற்சியும் அளித்தார்.