நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுறுசுறுப்பின் எதிரி சோம்பல். இதற்கு வெற்றியை தடுக்கும் சக்தி உண்டு. உதாரணமாக சோம்பேறிகளுக்கு ஏழு மணி நேரம் துாங்கிய பின் படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் இருக்காது. இதில் இருந்து விடுபட நபிகள் நாயகம் வழி சொல்கிறார். கேளுங்கள்.
மனிதன் உறங்கும் போது அவனது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு எனக் கூறுகின்றான். அதிகாலையில் விழித்து இறைவனை நினைத்தால் முதல் முடிச்சு அவிழ்ந்து விடும். ஒளு(நீரால் கை, கால்களை கழுவினால்) செய்தால் இரண்டாவது முடிச்சும், தொழுகையில் ஈடுபட்டால் மூன்றாவது முடிச்சும் அவிழும்.
அந்த மனிதருக்கே மகிழ்ச்சியானதாகவும், அமைதியானதாகவும் காலைப் பொழுது அமையும். இல்லாவிட்டால் அமைதி இல்லாத, சோம்பல் நிறைந்ததாக காலைப் பொழுது விடியும்.