
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணம் அல்லது பொருளை தர்ம சிந்தனையுடன் பிறருக்கு கொடுப்பதற்கு 'சதகா' என்று பெயர். பணமோ, பொருளோ இல்லாத நிலையில் தர்மத்தை எப்படி செய்யலாம்? முடிந்தளவு உழைப்பால் பிறருக்கு உதவலாம். அதாவது உழைப்பின் மூலம் தானும் பயனடைந்து பிறருக்கு சதகா செய்யலாம். கஷ்டப்படுவோருக்கு ஆதரவாக நல்ல ஆலோசனை சொல்லலாம். தீய செயலில் ஈடுபடாமல் ஒருவனை தடுக்கலாம். இதுவும் தர்மம் செய்வதற்கு சமம்.