நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறை நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சி ஏற்படும் போது அதை கொடுத்த இறைவனுக்கு நன்றி என பிரார்த்தனை செய்வர். ஏதேனும் தீமை வந்தால் பொறுமையுடன் தாங்கிக் கொள்வர். இன்பத்திலும், துன்பத்திலும் மனம் கலங்குவதில்லை. அதனால் அவர்களின் வாழ்வில் என்ன நடந்தாலும் அது நன்மையாகவே முடியும்.
அவர்கள் எப்போதும் கீழ்க்கண்டவாறு துஆ செய்வர். 'என்னை மிகவும் பொறுமைசாலியாக்கு. மற்றவர்களின் பார்வையில் உயர்ந்தவனாக்கு. ஆனால் என் பார்வையில் என்னைத் தாழ்ந்தவனாக்கு' என வேண்டிக் கொள்வர்.