நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பறவை இனத்தில் சிறியதாகவும் அழகாகவும் இருப்பது தேன்சிட்டு. இவை கருப்பு, பச்சை நிறத்தையும் நீண்ட வாலையும் கொண்டிருக்கும். பூக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் இவற்றைக் காணலாம். இதன் முக்கிய உணவு தேன். தன் வளைந்த அலகால் பூக்களில் இருந்து தேனை உறிஞ்சும். சில நேரங்களில் பழங்கள், சிலந்திகள் என பூச்சிகளையும் சாப்பிடும். முடிந்தளவு தான் வாழும் இடத்திற்கு அருகிலேயே உணவைத் தேடும். இது போன்ற விஷயங்களை கவனித்து பாருங்கள். பறவைகளை கவனித்தது இல்லையா? அவை எவ்வாறு சுதந்திரமாக வாழ்கின்றன. இறைவனை தவிர அவற்றை தாங்கிக் கொண்டிருப்பவன் வேறு யார்? நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு திண்ணமாக இதில் பல சான்றுகள் உள்ளன.