நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்களுக்கு பிடிக்காத நபர் ஒருவர் பிரச்னையில் மாட்டிக் கொண்டார். என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறார். இந்த நிலையில் அவரைக் கண்டால், 'வசமா சிக்கிக்கிட்டான். நேத்து வர எப்படி ஆட்டம் போட்டான்' என கேலி பேசக் கூடாது.
இப்படி பேசினால் மறுமை நாளில் தண்டனைக்கு ஆளாக நேரிடும். துன்பம் செய்தவரை தண்டிக்கும் அதிகாரம் இறைவனுக்கே உண்டு. ஒருவர் தீயவராக இருந்தாலும் அவர் படும் துன்பத்தைக் கண்டு மகிழ்வது கூடாது. தவறு செய்தவர் திருந்தி வாழ தொழுகையில் ஈடுபடலாம்.